தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய காலியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Hostel Superintendent cum Physical Training Officer ஆகிய 18 பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை ஊதியம் பெறுவார்கள். இந்தப் பணியைப் பற்றிய முழுமையான தகவல்களை கீழே சேகரித்துள்ளோம். விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்கு முன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
காலிப்பணியிடங்கள்:
Hostel Superintendent cum Physical Training Officer பணிக்கென 18 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
TNPSC பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் உடற்கல்வியில் டிப்ளமோ படித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
சம்பள விவரம்:
தகுதியானவர்கள் ரூ.35,400 முதல் ரூ.130,400 வரை சம்பளம் பெறுவார்கள்.
வயது விவரம்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 37 ஆண்டுகள்.
தேர்வு செய்யும் முறை:
இந்த TNPSC பதவிக்கான விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
- பதிவு கட்டணம் – 150 ரூபாய்.
- தேர்வுக் கட்டணம் 150 ரூபாய்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நவம்பர் 16, 2023க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.