தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 9 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 200 ரூபாயும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாயும், டிகிரி முடித்தவர்களுக்கு 600 உதவித்தொகையும் மூன்றாண்டுகள் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தவாரக இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
மேலும், தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதுக்குள், மற்றவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும். பதிவு செய்து 1 ஆண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 600 ரூபாயும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதம் 750 ரூபாயும், பட்டதாரிகளுக்கு மாதம் 1000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
இந்த உதவித் தொகை பெறுவதற்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று விண்ணப்பம் பெற்று அல்லது என்ற https://tnvelaivaaippu.gov.in/Empower இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.